'சிரஞ்சீவி'யுடன் முதல்முறையாக ஜோடி சேரும் பிரபல நடிகை?


THIS heroine to play second lead in Chiru-Anil Ravipudi film?
x

சிரஞ்சீவியின் 157-வது படத்தை அனில் ரவிபுடி இயக்குகிறார்.

சென்னை,

பிரபல தெலுங்கு இயக்குனர் அனில் ரவிபுடி, சிரஞ்சீவியின் 157-வது படத்தை இயக்குகிறார். இப்படத்தை சுஷ்மிதா கொனிடேலாவின் கோல்ட் பாக்ஸ் எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஷைன் ஸ்கிரீன்ஸ் பேனரின் கீழ் சாஹு கரபதி தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், இரண்டாவது கதாநாயகியாக பிரபல நடிகை கேத்ரின் தெரசா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது.

நயன்தாரா முதன்மை கதாநாயகியாக நடிக்கவிருந்தாலும், கேத்தரின் கதாபாத்திரம் கதைக்கு முக்கியமானது என்று கூறப்படுகிறது. இது சிரஞ்சீவிக்கு ஜோடியாக அவர் பணியாற்றும் முதல் படமாகும்.

கேத்தரின், சிரஞ்சீவியின் 'வால்டேர் வீரய்யா' படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் அதில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story