8 நாட்கள் படப்பிடிப்பு...ரூ. 2,100 கோடி வசூல்...சாதனை படைத்த திகில் படம் - எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

இந்த படத்தின் படப்பிடிப்பு வெறும் 8 நாட்களில் முடிந்தது.
சென்னை,
திகில் படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. ஓடிடியில், திரில்லர் மற்றும் திகில் படங்களைப் பார்ப்பதில் பார்வையாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.
இப்போது நாம் பார்க்க போகும் படம் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான கோடிகளை வசூலித்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு வெறும் 8 நாட்களில் முடிந்தது. வெறும் ரூ.52 லட்ச ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டரூ. 2,000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது.
படத்தின் கதை 1994 ஆம் ஆண்டு மேரிலாந்தின் பர்கிட்ஸ்வில்லுக்கு அருகிலுள்ள பிளாக் ஹில்ஸ் காட்டில் நடைபெறுகிறது. ஹீதர் டோனாஹூ, ஜோசுவா லியோனார்ட் மற்றும் மைக்கேல் சி. வில்லியம்ஸ் ஆகிய மூன்று இளம் மாணவர்கள் பிளேர் விட்ச் என்ற சூனியக்காரியைப் பற்றிய ஆவணப்படத்தை எடுக்க காட்டுக்குள் செல்கிறார்கள்.
இந்த சூனியக்காரியைப் பற்றி உள்ளூர் மக்களிடம் பேட்டி எடுத்த பிறகு, அவர்கள் காட்டுக்குள் நுழைகிறார்கள். அப்போதிருந்து, விசித்திரமான மற்றும் பயங்கரமான நிகழ்வுகள் ஒவ்வொன்றாக நடக்கத் தொடங்குகின்றன. அவர்களின் கேமராக்களில் பயங்கரமான காட்சிகள் பதிவாகின்றன. படத்தின் பெயர் தி பிளேர் விட்ச் ப்ராஜெக்ட்.இத்திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.






