

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது தமிழக முதல்-அமைச்சராகி விட்டார். அதேபோல தயாரிப்பாளரும், நடிகருமாக இருந்த உதயநிதி ஸ்டாலின், இன்றைக்கு எதிர்க்கட்சி தலைவராகி விட்டார். ஆக, சட்டமன்றத்தில் திரையுலகினரின் ஆட்சி நடக்கிறது என்று அனைவருமே பேசிவருகிறார்கள்.
இதற்கிடையில் விஜய்யும், உதயநிதி ஸ்டாலினும் தோளோடு தோள் கைகோர்த்துக்கொண்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை தற்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து, 'இது காலத்தின் விசித்திர கோலம்' என்று கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
விஜய் நடித்த 'குருவி' படத்தை தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் 2008-ம் ஆண்டு தயாரித்தார். மேலும் 'பீஸ்ட்', 'வாரிசு' படங்களை வினியோகமும் செய்துள்ளார். உதயநிதிக்கு பிறகு தற்போது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் நிர்வாக பொறுப்புகளை அவரது மகன் இன்பநிதி கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.