இந்த மாதிரி ஒரு படத்தில் நடிப்பது இதுவே முதல் முறை - ஸ்ரீநிதி ஷெட்டி

இதுவரை ஸ்ரீநிதி நடித்த அனைத்து படங்களுமே வன்முறை மற்றும் ரத்தத்தால் நிரம்பியிருந்தன.
This is my first time acting in a film like this - Srinidhi Shetty
Published on

சென்னை,

மாடலிங் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஸ்ரீநிதி ஷெட்டி, கடந்த 2018 ஆம் ஆண்டு KGF திரைப்படம் மூலம் சினிமா துறையில் நுழைந்தார். கேஜிஎப் மற்றும் கேஜிஎப் 2 படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த ஸ்ரீநிதி, சமீபத்தில் நானி நடித்த ஹிட் 3 திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தமிழில் இவர் விக்ரமுடன் கோப்ரா படத்தில் நடித்திருந்தார். இதுவரை ஸ்ரீநிதி நடித்த அனைத்து படங்களுமே வன்முறை மற்றும் ரத்தத்தால் நிரம்பியிருந்தன. ஆனால் இப்போது முதல் முறையாக ஸ்ரீநிதி அப்படி எதுவும் இல்லாமல் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்தப் படம் ஒரு காதல் நகைச்சுவைப் படமாக எடுக்கப்பட்டுள்ளது.

அதுதான் தெலுசு கடா. சித்து ஜொன்னலகட்டா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை நீரஜா கோனா இயக்கியுள்ளார். இப்படம் வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், புரமோஷன்களில் பங்கேற்கும் ஸ்ரீநிதி, தனது வாழ்க்கையில் முதல்முறையாக ஸ்டண்ட் மற்றும் ரத்தம் இல்லாமல் ஒரு படத்தில் நடித்துள்ளதாகக் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com