’இது தியேட்டர் கிடையாது’... ரசிகர்களை கடிந்துகொண்ட அஜித் - வீடியோ வைரல்

ரசிகர்களை கடிந்துகொள்ளும் அஜித்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
’இது தியேட்டர் கிடையாது’... ரசிகர்களை கடிந்துகொண்ட அஜித் - வீடியோ வைரல்
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, தீவிர கார் பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித் குமார். கடந்த ஆண்டு முதல் கார் ரேசிங்கில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அஜித் குமார், ‘அஜித் குமார் ரேசிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.

இந்த கார் பந்தய அணி, துபாய், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் வென்றுள்ளது. அபுதாபி, பார்சிலோனா, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் தனது அணியினருடன் அஜித் குமார் பங்கேற்று வருகிறார்

Also Read
"ஜனநாயகன்" படத்தின் சென்சார் விவகாரம் தொடர்பான வழக்கு வாபஸ்
’இது தியேட்டர் கிடையாது’... ரசிகர்களை கடிந்துகொண்ட அஜித் - வீடியோ வைரல்

இந்த நிலையில், அபுதாபியில் உள்ள யாஸ் மெரினா சர்க்யூட்-இல் நடைபெற்ற கார் ரேசின்போது, ரசிகர்களை கடிந்துகொள்ளும் அஜித் குமாரின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்,

“ப்ளீஸ்…ஒழுங்கா நடந்துக்கோங்க…இது தியேட்டர் கிடையாதுங்க…” என்று அவர் ரசிகர்களிடம் கடிந்து கொள்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com