' என் கெரியரில் சிறந்த படம் அது' - அனுபமா

'பரதா' பட புரமோஷன் நிகழ்வில் அனுபமா சுவாரஸ்யமான கருத்துகளைத் தெரிவித்தார்.
சென்னை,
நடிகை அனுபமா பரமேஸ்வரன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் படம் 'பரதா'. இந்தப் படத்தை பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கியுள்ளார். இப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால், அனுபமா புரமோஷன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
சமீபத்தில் 'பரதா' பட புரமோஷன் நிகழ்வில் அவர் சுவாரஸ்யமான கருத்துகளைத் தெரிவித்தார். இது அவரது கெரியரில் சிறந்த படமாக இருக்கும் என்று கூறினார்.
அவர் கூறுகையில், "என் கேரியரில் சிறந்த படம் 'பரதா'. வருகிற 22-ம் தேதி நீங்களும் அதையே சொல்வீர்கள் என்று நான் நம்புகிறேன். எல்லோரும் படத்தைப் பாருங்கள். உங்களுக்குப் பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களிடமும் சொல்லுங்கள்" என்றார்.
சில நாட்களுக்கு முன்பு விஜயவாடாவில் நடைபெற்ற பரதா பட நிகழ்வில் அனுபமா கண் கலங்கினார். பல சிரமங்களைச் சந்தித்து எடுக்கப்பட்ட படம் பரதா, இந்தப் படத்திற்கு ஆதரவு கொடுங்கள் என்று அவர் கூறினார். பரதா படம் வருகிற 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.






