தமிழ் சினிமாவுக்கு இது பொற்காலம் - நடிகர் கமல்ஹாசன் பேட்டி

தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது போன்றது உணர்வு எனக்குள் ஏற்பட்டிருக்கிறது என நடிகர் கமல்ஹாசன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவுக்கு இது பொற்காலம் - நடிகர் கமல்ஹாசன் பேட்டி
Published on

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. தற்போது இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் வேளச்சேரியில் உள்ள தியேட்டருக்கு சென்று பார்த்தார். பின்னர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "ஒரு ரசிகனாக இந்த திரைப்படத்தை பார்க்கும்போது ஏற்பட்ட மலைப்பு, கண்டிப்பாக அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும். எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். படத்தை பார்த்த மகிழ்ச்சியில் சொல்கிறேன். தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது போன்றது உணர்வு எனக்குள் ஏற்பட்டிருக்கிறது. ஒரு தமிழ் சினிமா கலைஞராக தயாரிப்பாளராக எனக்கு இது பெருமிதம் கொள்ளும் நேரமாகவும் இருக்கிறது. பொன்னியின் செல்வனில் நான் நடிப்பதாக இருந்த வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் பல வேடங்களில் நானே நடிக்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். போர்க்கள காட்சிகளை படமாக்குவது எத்தனை கடினம் என்பது எமக்குத்தெரியும். கத்தி, கேடயம், கவசம், கிரீடம், குதிரை, புழுதி இதனுடன் நடிப்பு என எல்லாவற்றையும் நன்றாக செய்ய வேண்டும். இவை எல்லாவற்றையும் விக்ரம் மிக நன்றாக செய்திருக்கிறார். இந்த படத்தை பார்க்கும்போது நான் தயாரித்தது போன்ற ஒரு மகிழ்ச்சி இருக்கிறது" என்றார்.

பேட்டியின்போது நடிகர்கள் விக்ரம், கார்த்தி, தயாரிப்பாளர் தமிழ்க்குமரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com