இதுதான் ‘டோரதி’ படத்தின் ஒரிஜினல் கிளைமாக்ஸ் - இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஓபன் டாக்!

இந்த படம் தியேட்டர்களில் மட்டுமல்லாமல் ஓடிடி தளத்திலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதுதான் ‘டோரதி’ படத்தின் ஒரிஜினல் கிளைமாக்ஸ் - இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஓபன் டாக்!
Published on: 

சென்னை,

பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், ‘டோரதி' படத்தின் அசல் கிளைமாக்ஸை பகிர்ந்துள்ளார்.

‘டோரதி’ திரைப்படம்

தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கியுள்ள இயக்குநர்களில் ஒருவர் கார்த்திக் சுப்பராஜ். இவரது இயக்கத்தில் உருவான 'டோரதி' திரைப்படம் கடந்த 25-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 1990-களின் பின்னணியில், சாதி சார்ந்த வன்முறை மற்றும் இரு நண்பர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகும் 10-வது திரைப்படம் என்ற சிறப்பையும் 'டோரதி' பெற்றுள்ளது.

திரைப்பிரபலங்கள் பாராட்டு

வெளியானது முதலே 'டோரதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. கீர்த்தி சுரேஷின் நடிப்புக்கும் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. நடிகர் தனுஷ், நடிகை ஸ்ரீலீலா, இயக்குநர் மணிரத்னம், இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, இயக்குநர் ராஜு முருகன், நடிகர் ஸ்ரீமான் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் இப்படத்தைப் பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.

‘டோரதி' படத்தின் அசல் கிளைமாக்ஸ் இதுதான்

இந்த நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், ‘டோரதி' படத்தின் அசல் கிளைமாக்ஸை பகிர்ந்துள்ளார். அதாவது, “டோரதி ஸ்கிரிப்டில் சுப்புவை பெண் உடையில் பார்த்ததும் வீரய்யாவுக்கு தனது தாய் நினைவுக்கு வருகிறார். இதனால் மனம் மாறி, தனது கூட்டாளிகளைத் தடுக்க முயற்சிக்கிறார். ஆனால் அவரது ஆட்கள் கார்த்தியைக் கொலை செய்ய முயல, களத்தில் இறங்கும் டோரதி, புரூஸ் லீ பாணியில் அதிரடி சண்டையிட்டு எதிரிகளை வீழ்த்துகிறார். இந்த அதிரடி சண்டைக் காட்சியுடன் ஒரிஜினல் கிளைமாக்ஸ் நிறைவடைகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

X