"ஆங்கிலத்தில் டைட்டில் வைக்க இதுதான் காரணம்" - சசிகுமார்


This is the reason for putting the title in English - Sasikumar Open Talk
x
தினத்தந்தி 4 May 2025 6:11 AM (Updated: 4 May 2025 6:44 AM)
t-max-icont-min-icon

சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் குடும்ப கதையில் கடந்த 1-ம் தேதி வெளியான படம் 'டூரிஸ்ட் பேமிலி'

சென்னை,

அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் குடும்ப கதையில் கடந்த 1-ம் தேதி வெளியான படம் 'டூரிஸ்ட் பேமிலி'. இப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் ஆங்கில பெயர் வைத்ததற்கான காரணத்தை சசிக்குமார் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், 'தமிழ் பெயர் வைப்பதை நாங்கள் தவிர்க்கவில்லை. தற்போது படங்களை ஓடிடியில் விற்கிறோம். 3 மொழிகளில் ஓடிடியில் படத்தை விற்கும்போது ஆங்கில தலைப்பு வைக்க வேண்டியுள்ளது.

தமிழ் மட்டுமில்லாமல் படத்தை உலகம் முழுவதும் கொண்டுசெல்ல வேண்டும் என்பதால் ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கப்படுகிறது. முன்பு தமிழில் படத்தின் பெயர் வைத்தால்தான் வரிச்சலுகை உண்டு. ஆனால் இப்போது அப்படி இல்லை' என்றார்.

1 More update

Next Story