நாம் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இது! - இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்


நாம் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இது! - இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்
x

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரெயில் நிலையம் அருகே வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறார்களால் பட்டாக்கத்தியால் கண்மூடித்தனமாக தாக்கப்படும் சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இப்படியான நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சென்னையில் நான் வசிக்கும் பகுதி, போதைப்பொருளுக்கு அடிமையான குண்டர்கள் மற்றும் குற்றவாளிகளால் மிக அபாயகரமானதாக இருக்கிறது. எனது ஸ்டுடியோ பகுதியில் உள்ள பல அப்பாவி கட்டுமானத் தொழிலாளர் நண்பர்கள், சமீபத்தில் பல முறை தாக்கப்பட்டனர். இந்தத் தாக்குதல்காரர்களில் பெரும்பாலானோர் இனவெறியர்களாக இருப்பதற்கு பெருமைப்படுகிறார்கள்; மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மக்களை ஒட்டுமொத்தமாக வெறுத்துத் தாக்குகிறார்கள்.

இத்தகையவர்களுக்கு ஆதரவாக பல உள்ளூர் அரசியல் குழுக்களும், சாதி அடிப்படையிலான அமைப்புகளும் ஓடி வருகின்றன. இதை ஏற்றுக்கொண்டு உண்மை நிலையை புரிந்து பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற முடியாதா? இது நான் உட்பட அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டிய நேரமாகும்." என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story