நான் அப்செட் ஆகிவிட்டேன் என்றால் இதை செய்வேன்- நடிகை கீர்த்தி சுரேஷ்

‘உப்பு கப்புறம்பு’ திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்திருக்கிறார்.
நான் அப்செட் ஆகிவிட்டேன் என்றால் இதை செய்வேன்- நடிகை கீர்த்தி சுரேஷ்
Published on

சென்னை,

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் பாலிவுட்டில் வருண் தவானுடன் இணைந்து 'பேபி ஜான்' என்ற படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து, 'ரிவால்வர் ரீட்டா' என்ற படத்திலும், அக்கா என்ற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். இவை அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் `உப்பு கப்புரம்பு ' என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் அமேசான் பிரைமில் நேரடி ஓடிடி ரிலீசாக வெளியானது. திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படம் ஒரு நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ளது. படத்தில் கீர்த்தி சுரேஷ் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் அந்த கதாப்பாத்திரத்தை கையாண்டுள்ளார். இப்படத்தில் சுகாஸ் கதாநாயகனாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் அவர் அப்செட் அல்லது மனம் சரியில்லை என்றால் என்ன செய்வேன் என கூறியுள்ளார். அதில் "நான் சில நேரங்களில் நான் அப்செட் ஆகிவிடுவேன். அப்படி ஆகிவிட்டால் நன்றாக சாப்பிடுவேன். அதேபோல் காரை எடுத்துக்கொண்டு தனியாக ட்ரைவ் செய்வேன், அப்போது நல்ல மியூசிக் கேட்பேன். அதுமட்டுமின்றி, வீட்டில் ஒரு நாய்க்குட்டி வளர்க்கிறேன். அப்செட் என்ன வந்தாலும் அவன் முகத்தை பார்த்தால் போதும் அவை அனைத்தும் காணாமல் போய்விடும்" என கூறியுள்ளார்.

View this post on Instagram

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com