'இதனால்தான் யாரையும் திருமணத்திற்கு அழைக்கவில்லை' - 'டான்' பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி

'டான்' படப்புகழ் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி - ஸ்ரீ வர்ஷினி திருமணத்திற்கு பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்
'This is why no one is invited to the wedding' - 'Don' director Cibi Chakaravarthi
Published on

சென்னை,

சிவகார்த்திகேயன் நடிப்பில் எஸ்.கே. புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த 'டான்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிபி சக்ரவர்த்தி. இவருக்கும் பிரபல நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரியும் ஸ்ரீ வர்ஷினிக்கும் கடந்த 5-ம் தேதி ஈரோட்டில் திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு புதுமணத் தம்பதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்நிலையில், திருமணத்திற்குப் பின் சிபி சக்கரவர்த்தியும் அவரது மனைவி ஸ்ரீ வர்ஷினி சிபியும் இன்று மதியம் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது 'டான்' படத்திற்கு பத்திரிக்கையாளர்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்த சிபி சக்கரவர்த்தி, அடுத்த படத்திற்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் ஆதரவு தேவை என்றார். மேலும், வெளியூரில் திருமணம் நடந்ததால் யாரையும் அழைக்க முடியவில்லை என்றும் அதற்காகதான் இந்த சந்திப்பு என்றும் கூறினார்.

விஜய்யின் 'தெறி', 'மெர்சல்' படங்களில் இயக்குனர் அட்லீயிடம் உதவியாளராகப் பணியாற்றிய சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் திரைப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து கலக்கியது. தற்போது, மீண்டும் சிவகார்த்திகேயனோடு சிபி இணைய இருப்பதாக கூறப்படுகிறது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com