"சரண்டர்" படத்தில் இதனால்தான் பாடல் வைக்கவில்லை- இயக்குனர் கவுதமன்


சரண்டர் படத்தில் இதனால்தான் பாடல் வைக்கவில்லை- இயக்குனர் கவுதமன்
x

அறிமுக இயக்குனர் கவுதமன் கணபதி இயக்கியுள்ள 'சரண்டர்' படம் ஆகஸ்ட் 1ந் தேதி வெளியாகிறது.

சென்னை,

அப்பிட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கிரைம்-ஆக்சன் திரில்லராகவும் உணர்வுப் பூர்வமாகவும் உருவாகியுள்ள படம் சரண்டர். இந்தபடம் தமிழ் சினிமாவில் முற்றிலும் புதுமையான அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தினை விக்டர் குமார் தயாரித்துள்ளார். தர்ஷன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தினை அறிமுக இயக்குனர் கவுதமன் கணபதி இயக்கியுள்ளார். தர்ஷன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இந்த படத்தில் லால், சுஜித் சங்கர், முனிஷ்காந்த், மன்சூர் அலிகான், பதினே குமார் உள்ளிட்ட திறமையான நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஆகஸ்ட் 1ந் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய இயக்குனர் கவுதமன், இந்தப்படத்தை மிக நேர்மையாக எடுத்துள்ளோம். படத்தில் பாட்டு இல்லை. வேண்டும் என்றே வைக்கவில்லை என்று கூற முடியாது. தேவைப்படவில்லை. தர்ஷனும் எனக்கு இது மாதிரி வேண்டும் என எதையுமே கேட்கவில்லை. இந்த படம் நேர்த்தியாக வந்துள்ளது' என்றார்.

1 More update

Next Story