'எல் 2 எம்புரான்' : மோகன்லால் படத்தில் இணையும் 'சலார்' நடிகர்

'லூசிபர்' படத்தின் 2-ம் பாகத்திற்கு 'எல் 2 எம்புரான்' என பெயரிடப்பட்டுள்ளது.
'எல் 2 எம்புரான்' : மோகன்லால் படத்தில் இணையும் 'சலார்' நடிகர்
Published on

காந்திநகர்,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் நடிப்பில், மலையாள நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'லூசிபர்'. இந்த படத்தின் மூலம் பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமானார். மோகன்லால் கதாநாயகனாக நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது, இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு 'எல் 2 எம்புரான்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இந்த போஸ்டர் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு குஜராத் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் 'சலார்' படத்தில் நடித்து பிரபலமான நடிகர் கார்த்திகேய தேவ் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் 'சலார்' படத்தில் இளம் வயது வரதராஜ மன்னார் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com