'தலைவர் 171' படத்தில் லியோ பட நடிகர்

'தலைவர் 171' படத்தின் டீசர் வரும் 22-ம் தேதி வெளியாக உள்ளது.
'தலைவர் 171' படத்தில் லியோ பட நடிகர்
Published on

சென்னை,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தலைவர் 171' படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு தற்காலிகமாக தலைவர்-171 என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. ஜெயிலர் படத்தை தயாரித்த 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளது.

கமலுக்கு 'விக்ரம்' என்ற மெகா ஹிட் படத்தை லோகேஷ் கனகராஜ் கொடுத்து உள்ளார். அதேபோல இந்த படத்தையும் எடுக்க லோகேஷ் முடிவு செய்து உள்ளார். மேலும் இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஜினியின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் வெளியானது.

இது ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. மேலும் ரஜினியின் கைகளில் தங்க கடிகாரம் - கை விலங்கு சூழப்பட்டிருந்தது. அந்தப் போஸ்டரை பார்த்த ரசிகர்களுக்கு பல்வேறு யூகங்கள் தோன்றின. மேலும் அந்த படத்தில் ரஜினிகாந்த் 'தாதா' வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் பரவியது. இப்படத்தின் டீசர் வரும் 22-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், 'தலைவர் 171' படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் நடித்த சாண்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பட நிகழ்ச்சி ஒன்றில் சாண்டி கலந்துகொண்டபோது, 'தலைவர் 171' படத்தில் நீங்கள் உள்ளீர்களா? அவ்வாறு இருந்தால் நடன கலைஞராகவா அல்லது நடிகராகவா என்று கேட்டனர். அதற்கு அவர் நான் படத்தில் நிச்சயமாக இருப்பேன். லோகேஷ் கனகராஜ்தான் இறுதி முடிவை எடுப்பார். இவ்வாறு கூறினார். இவர்தான் 'தலைவர் 171' படத்தில் நடிப்பதை உறுதி செய்த முதல் நட்சத்திரம் ஆவார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com