சாதி பார்க்கும் முறையை இந்த வெற்றி உடைத்திருக்கிறது! - பா.ரஞ்சித்

முதல் தேர்தலிலேயே வெற்றி வாகை சூடி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக த.வெ.க. உயர்ந்துள்ளது.
சாதி பார்க்கும் முறையை இந்த வெற்றி உடைத்திருக்கிறது! - பா.ரஞ்சித்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் த.வெ.க. வெற்றி பெற்று, 59 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. முதல் தேர்தலிலேயே வெற்றி வாகை சூடி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக உயர்ந்துள்ளது.

அதாவது, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் எடப்பாடி தொகுதியைத் தவிர்த்து மொத்தம் 233 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட த.வெ.க., 107 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. த.வெ.க.-வின் இந்த வெற்றியை தமிழகம் முழுவதும் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்(த.வெ.க.) 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றதை தொடர்ந்து விஜய்க்கு திரையுலகினர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில், இயக்குனர் பா.ரஞ்சித் த.வெ.க. தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிப் பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அதன் தலைவர் விஜய் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ஆண்டாண்டுகாலமாக சாதி பார்த்து வேட்பாளர்கள் தேர்வு செய்யும் முறையயும், பணபலம் உள்ளவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் எனும் கருத்தாக்கத்தையும் இந்த வெற்றி உடைத்திருக்கிறது.

மக்களுடைய பெருவாரியான அன்பையும் நம்பிக்கையும் பெற்றிருக்கிறீர்கள். அவர்களின் தேவையை உணர்ந்து அதனை நிறைவேற்றும் அரசாக உங்கள் அரசு செயலாற்ற வேண்டுமென நம்புகிறேன். வாழ்த்துகள்." என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com