இந்த வருடம்...இதுவரை 128 படங்கள் - எத்தனை ஹிட்? - வெளியான அதிர்ச்சி தகவல்


This year... 128 films have been released so far - do you know how many were hits?
x
தினத்தந்தி 4 July 2025 9:30 PM IST (Updated: 4 July 2025 9:31 PM IST)
t-max-icont-min-icon

தமிழ் சினிமாவில் கடந்த 6 மாதங்களில் 128 படங்கள் வெளியாகி இருக்கின்றன.

சென்னை,

2025-ம் ஆண்டின் முதல் பாதி சற்று சுவாரஸ்யமாக முடிந்திருக்கும் நிலையில், இதுவரை 128 தமிழ் படங்கள் வெளியாகி இருக்கின்றன. அதில், வெறும் 13 படங்கள் மட்டுமே வர்த்தக ரீதியில் வெற்றி பெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் கடந்த 6 மாதங்களில் வெளியான 128 படங்களில் 13 படங்கள் மட்டுமே வர்த்தக ரீதியில் வெற்றி பெற்றுள்ளதாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத கஜ ராஜா, டிராகன், குடும்பஸ்தன், பெருசு, பையர், மர்மர், குட் பேட் அக்லி, ரெட்ரோ, டூரிஸ்ட் பேமிலி, மாமன், குபேரா, டிஎன்ஏ, மார்கன் ஆகிய படங்கள் மட்டுமே தயாரிப்பாளர்களுக்கு கமர்சியல் சக்சஸ் கொடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.


1 More update

Next Story