பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு அரபு நாடுகள் போன்று தண்டனை வழங்க வேண்டும்: ஷகீலா

பெண் குழந்தைகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு, அரபு நாடுகளில் வழங்குவது போன்று தண்டனை வழங்க வேண்டும் என்று கவர்ச்சி நடிகை ஷகீலா ஆவேசமாக பேசினார்.
பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு அரபு நாடுகள் போன்று தண்டனை வழங்க வேண்டும்: ஷகீலா
Published on

உச்சம் என்ற குறும் படத்தின் அறிமுக கூட்டம், சென்னையில் நடந்தது. இது பெண் குழந்தைகள்கற்பழிப்பை கருவாக கொண்ட படம். அதில் கவர்ச்சி நடிகை ஷகீலா கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

குழந்தைகளை கற்பழிப்பவர்களுக்கு அரபு நாட்டில் கடுமையான தண்டனை கொடுக்கிறார்கள். இதுபோன்ற தண்டனைகளை இங்கேயும் கொடுக்க வேண்டும். இது என் ஒருத்தியின் தனிப்பட்ட கருத்து அல்ல. எல்லோருடைய கருத்தும். இந்த படத்தில், திருநங்கை ஒருவர் சிறப்பாக நடித்து இருக்கிறார். அவர்களை திருநங்கை என்று அழைப்பதில், எனக்கு உடன்பாடு இல்லை. அவர்களும் பெண்கள்தான். பெண்களுக்கு எப்படி மரியாதை கிடைக்கிறதோ, அப்படி இவர்களுக்கும் மரியாதை கொடுக்க வேண்டும்.

இவ்வாறு ஷகீலா பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com