விஜய்க்காக வாதாடுபவர்களும், தமிழ்நாட்டு மக்களாகிய நாமும்தான் பாவம் - நடிகை ரோகிணி

கவர்ச்சி குறித்து திருச்சியில் முதல்வர் விஜய் பேசியதற்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. திரையுலகை சேர்ந்த ரோகிணி தன் கருத்தை தெரிவித்துள்ளார்.
விஜய்க்காக வாதாடுபவர்களும், தமிழ்நாட்டு மக்களாகிய நாமும்தான் பாவம் - நடிகை ரோகிணி
Published on

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவரும், முதல்-அமைச்சருமான ஜோசப் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்திருக்கிறார்.

திருச்சியில் மக்களுக்கு நன்றி சொல்லும் நிகழ்ச்சியை நடத்தினார் முதல்-அமைச்சர் விஜய். அதில் அவர் பேசிய விஷயங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது.

இந்நிலையில் நடிகை ரோகிணி விஜய் பேச்சு பற்றி தன் பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “கவர்ச்சி மெட்டீரியலாக நடிகைகள், பெண்களை நாங்கள் பயன்படுத்தவில்லை ஐயா. Film charishma என்கிற அர்த்தத்தில் தான் பெரும்பாலானவர்கள் சினிமா கவர்ச்சி என்கிற பதத்தை பயன்படுத்தினார்கள். என் தரம் இவ்ளவு தான் என்று நீங்களே நிர்ணயிக்கிறீர்கள். என்ன செய்ய? பாவம் இவருடன் நடித்த தமிழ் நடிகைகள்..அவர்களுக்கு எல்லாம் ஆழந்த அனுதாபங்கள்... தற்போது பாவம் இவருக்காக வாதாடுபவர்களும், தமிழக மக்களாகிய நாமும்” என தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com