வெளிநாட்டில் இருந்து வந்து தேர்தலில் வாக்களித்தவர்கள் பாராட்டுக்குரியவர்கள் - நடிகர் வடிவேலு

தேர்தலுக்காக வெளிநாட்டில் இருந்து வந்து வாக்களித்தவர்கள் பாராட்டுக்குரியவர்கள் என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் இருந்து வந்து தேர்தலில் வாக்களித்தவர்கள் பாராட்டுக்குரியவர்கள் - நடிகர் வடிவேலு
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குச் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. தமிழகத்தில் இந்தமுறை 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக கட்சிகள் போட்டியிட்டுள்ளனர். கடந்த முறையை விட இந்த முறை அதிகளவிலான வாக்குகள் பதிவாகி உள்ளது. தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் 85 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

இன்று காலை 7 மணி முதலே நடிகர்கள், திரைப் பிரபலங்கள், முக்கிய அரசியல் கட்சியினர் தங்களது வாக்குகளை செலுத்தினர். அந்த வகையில், சாலிகிராமம் வாக்குச்சாவடியில் நடிகர் வடிவேலு வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களுடன் அவர் “ சிரமம் பார்க்காமல் அனைவரும் வாக்களிக்க வேண்டும். நம் நாட்டிற்கு நீங்கள் அளிக்கும் வாக்குகள் நன்மை பயக்கும். சின்னத்தைப் பார்த்து வாக்களிக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து வந்து வாக்களிக்கிறார்கள் என்றால் அது நல்லதுதான். வந்து வாக்களித்துவிட்டு போகட்டும்.வெளிநாட்டில் இருந்து வாக்களிக்க வருபவர்கள் பாராட்டுக்குரியவர்கள். அவர்களை ஏன் வந்தீர்கள் என்றா கேட்க முடியும்? தேர்தல் ஆணையம் தெளிவாக உள்ளது. அது குறித்து குறை கூறினால் நம் மீது வழக்கு போட்டுவிடுவார்கள்” எனக் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com