மகன் வீடியோக்களை நீக்க சொல்லி மிரட்டல்? - மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி


மகன் வீடியோக்களை நீக்க சொல்லி மிரட்டல்? - மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி
x
தினத்தந்தி 3 July 2025 1:45 PM IST (Updated: 3 July 2025 1:45 PM IST)
t-max-icont-min-icon

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி பீனிக்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார்.

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவரது மகனான சூர்யா சேதுபதி தன்னுடைய தந்தையோடு சேர்ந்து ஒரு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தற்போது பீனிக்ஸ் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் புரமோஷனில் சூர்யா சேதுபதி பேசிய வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக புகார் எழுந்தது.

அதாவது சூர்யா சேதுபதி தனது முதல் படத்தின் புரமோஷனில் பேசும்போது என்னுடைய அப்பா வேறு நான் வேறு என்று பேசியது விமர்சனங்களை சந்தித்தது. அதேபோல, அண்மையில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த சூர்யா சேதுபதி, பபுள்கம் சாப்பிட்டபடியே போஸ் கொடுத்து இருந்தார்.

இது இணையத்தில் விமர்சனத்திற்குள்ளானது. இந்த நிலையிதான் மேற்கூறிய வீடியோக்களை நீக்குவதற்காக சூர்யா மற்றும் விஜய் சேதுபதி தரப்பில் இருந்து மிரட்டல் வந்ததாக சில புகார்கள் எழுந்தது. இது பற்றி இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய விஜய் சேதுபதியிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி "எங்கள் தரப்பில் இருந்து யாருக்காவது அழைப்பு வந்து, மிரட்டல் நடந்து இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்" என்று கூறியுள்ளார் .

1 More update

Next Story