"தக் லைப்" படத்திற்கான டிக்கெட் முன்பதிவு நாளை துவக்கம்

கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள 'தக் லைப்' படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.
"தக் லைப்" படத்திற்கான டிக்கெட் முன்பதிவு நாளை துவக்கம்
Published on

சென்னை,

36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.

படத்தின் ரிலீஸ் தேதி நெறுங்கி வருவதால் படத்திற்கான புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது கமல், தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததாக கூறிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு கர்நாடகத்தில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. மேலும் கன்னட அமைப்பினர், எழுத்தாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் கமல்ஹாசனை கண்டித்தும் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர் தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். 'தக் லைப்' திரைப்படத்திற்கு கர்நாடகாவில் தடை விதிப்பதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தெரிவித்துள்ளது.

 இந்த நிலையில் தமிழகத்தில் 'தக் லைப்' படத்திற்கான டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்க உள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. தமிழகத்தில் சுமார் 800 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com