'தக் லைப்': யாருக்கு ஜோடி? - திரிஷா கொடுத்த ஹிண்ட்

'தக் லைப்' படம் அடுத்த மாதம் 5-ம் தேதி வெளியாகிறது.
சென்னை,
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம்'தக் லைப்'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய திரிஷா, படத்தில் யாருக்கு ஜோடி? என்பது பற்றி ஹிண்ட் கொடுத்தார்.
அவர் கூறுகையில், "தக் லைப் பட டிரெய்லரைப் பார்த்த பிறகு திரிஷா யாருக்கு ஜோடி? என்ன கதாபாத்திரம்? என பலருக்கும் கேள்விகள் உள்ளன. நீங்கள் பார்த்தது வெறும் 2 நிமிட காட்சிதான், 2 மணிநேர படத்தைப் பார்த்த பிறகு உங்களுக்குப் புரியும்" என்றார்.
'தக் லைப்' படத்தில் நடிகை திரிஷா, சிம்புவுக்கு ஜோடியாக நடிப்பதாக எதிர்பார்க்கப்பட்டநிலையில், டிரெய்லர் வெளியாகி கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கிறாரா? என்ற கேள்வியை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






