'தக் லைப்' படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள 'தக் லைப்' படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.
'தக் லைப்' படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது
Published on

சென்னை,

36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படத்திற்கான புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 'தக் லைப்' படத்திற்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணியிலிருந்து தொடங்கி உள்ளது. இப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 800 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com