பவன் கல்யாண் படத்திற்கு டிக்கெட் விலை உயர்வு

பவன் கல்யாண் நடித்துள்ள 'ஹரி ஹர வீர மல்லு' படம் வருகிற 24-ந் தேதி வெளியாக உள்ளது.
பவர் ஸ்டார் பவன் கல்யாண் அரசியல்வாதியும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ஆவார். இவர் தற்போது ஹரி ஹர வீர மல்லு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். கிரிஷ் மற்றும் ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ள இந்த படத்திற்கு கீரவாணி இசை அமைத்திருக்கிறார். இப்படத்தில் நாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார்.
இப்படம் வருகிற ஜூலை 24-ந் தேதி நாளை மறுநாள் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழியில் ஒரு பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இந்த படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பினை வைத்துள்ளனர்.
இந்த நிலையில், `ஹரிஹர வீர மல்லு' படத்தின் ரிலீஸையொட்டி, டிக்கெட் விலையை உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஜூலை 23ம் தேதி இரவு 9 மணிக்கு திரையிடப்படும் சிறப்பு காட்சிக்கு 600 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்ய அனுமதி வழங்கி தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.






