உடல் வாகுக்கும் அதுக்கும்.... சம்பந்தமே இல்லையே...! ஷகிலா கேள்வியால் கவர்ச்சிப் புயல் அதிர்ச்சி...!

உடல் வாகுக்கும் அதற்கும் சம்பந்தமே, இல்லை அறுவை சிகிச்சை செய்து கொண்டாயா? டிக்டாக் பிரபலத்திடம் கேட்ட நடிகை ஷகீலா
உடல் வாகுக்கும் அதுக்கும்.... சம்பந்தமே இல்லையே...! ஷகிலா கேள்வியால் கவர்ச்சிப் புயல் அதிர்ச்சி...!
Published on

சென்னை

டிக்டாக் மூலம் பிரபலமானவர் இலக்கியா. டிக்டாக்கில் இரட்டை அர்த்த வசனங்களில் அவர் வெளியிட்ட வீடியோக்கள் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றார் இலக்கியா. அரைகுறை உடையில் கவர்ச்சி ஆட்டம் போடுவது, ஆபாசமாக பேசுவது என டிக்டாக் செயலி அறிமுகம் ஆன வேகத்தில் அசுர வேகத்தில் பிரபலமானார் இலக்கியா.

டிக்டாக் தடை செய்யப்பட்ட பிறகும் கூட தனது மற்ற சமூக வலைதள பக்கங்களில் அதே வேலையை செய்து வருகிறார்.

டிக்டாக் இலக்கியாவுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளத்தை பார்த்து அவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது. ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ் இயக்கத்தில் நீ சுடத்தான் வந்தியா என்ற படத்தில் நடித்துள்ளார் டிக்டாக் இலக்கியா. அது மட்டுமின்றி வேறு சில படங்களிலும் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார் நடிகை டிக்டாக் இலக்கியா. இதனால் அவர் மீது சமீபத்தில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. டிக்டாக் இலக்கியாவும் தனது பெயரை வைத்து மோசடி நடப்பதாக போலீசில் புகார் அளித்தார். அண்மையில் இணையதளம் ஒன்றில் நடிகை ஷகீலா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார் இலக்கியா.

அப்போது தான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது தனது அம்மா இறந்ததாகவும், அதன் பிறகு அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் தனது வாழ்க்கை மாறியதாகவும் தெரிவித்தார்.

மேலும் தன்னுடைய அம்மா இருந்திருந்தால் தன் வாழ்க்கை வேற மாதிரி இருந்திருக்கும் என்றும் கூறினார் டிக்டாக் இலக்கியா. காதலிப்பதாக கூறி பழகிய துரோகம் செய்திருக்கிறார்கள் என்றும் கூறி கண்ணீர்விட்டார்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் டிக்டாக் இலக்கியாவின் மார்பகங்கள் குறித்து கேள்வி எழுப்பினார் ஷகீலா. உடல் வாகுக்கும் அதற்கும் சம்பந்தமே, இல்லை அறுவை சிகிச்சை செய்து கொண்டாயா? அல்லது ஊசி எதுவும் செலுத்திக் கொண்டாயா என பச்சையாக கேட்டு டிக்டாக் இலக்கியாவை நெளிய வைத்தார். அதற்கு பதில் கூறிய டிக்டாக் இலக்கியா, எங்கள் குடும்ப ஜீன் அப்படி. எங்கள் வீட்டில் பெண்கள் எல்லோருமே இப்படிதான் இருப்போம் என பதில் அளித்தார்.

மேலும் இதற்காக செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும், அப்படி இருந்தால் நான் ஏன் இப்படி இருக்க போகிறேன் என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com