அனுபமாவின் 'டில்லு ஸ்கொயர்' இன்று முதல் ஓடிடியில்

இன்று முதல் 'டில்லு ஸ்கொயர்’ படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது. இந்த படத்துக்கு ஓ.டி.டி.யிலும் பெரிய அளவில் ஆதரவு கிடைக்கும் என தெரிகிறது.
அனுபமாவின் 'டில்லு ஸ்கொயர்' இன்று முதல் ஓடிடியில்
Published on

கடந்த 2020-ம் ஆண்டு டிஜே தில்லு என்ற திரைப்படம் வெளியானது. மிக குறைந்த பட்ஜெட்டில் உருவான டிஜே தில்லு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெளியான சில நாட்களில் வசூலை வாரி குவித்தது. டிஜே தில்லுவின் முதல் திரைப்படத்தின் தொடர்ச்சியாக தில்லு ஸ்கொயர் என்ற திரைப்படத்தை சித்தாரா என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்போது தெலுங்கு சினிமாவில் பரபரப்பாக நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரன், டில்லு ஸ்கொயர் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலரில் படத்தின் கதாநாயகன் சித்துவோடு படு ரொமாண்டிக்கான காட்சிகளிலும் முத்தக் காட்சிகளிலும் நடித்திருந்தார். 

இந்தப் படத்தின் எழுத்தாக்கத்தில் பங்கேற்றிருப்பதோடு, தனக்கென்று ஒரு வித்தியாசமான பாத்திரத்தில் நடித்துள்ளார் சித்து ஜோனலகடா. அனுபமா பரமேஸ்வரன் இதில் கவர்ச்சித் தாரகையாகத் தோன்றியிருக்கிறார். 

படத்துக்கு இளைஞர்களின் ஆதரவு பெரியளவில் கிடைத்து 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. இந்நிலையில் இன்று முதல் இந்த படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது. இந்த படத்துக்கு ஓடிடியிலும் பெரிய அளவில் ஆதரவு கிடைக்கும் என தெரிகிறது.

View this post on Instagram

நடிகை அனுபமாவுக்கு இன்ஸ்டாகிராமில் 1 கோடியே 60 லட்சம் பாலோவர்கள் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com