'டிடி நெக்ஸ்ட் லெவல்' பட நிறுவனத்திற்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு நோட்டீஸ்


டிடி நெக்ஸ்ட் லெவல் பட நிறுவனத்திற்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு நோட்டீஸ்
x
தினத்தந்தி 14 May 2025 5:35 PM IST (Updated: 15 May 2025 12:19 PM IST)
t-max-icont-min-icon

அந்த நோட்டீஸில் 'சீனிவாசா கோவிந்தா' என்று தொடங்கும் பாடலை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பதி,

இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'. இதில் சந்தானத்துடன் இணைந்து கஸ்தூரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 16-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இதற்கிடையில் இப்படத்திலிருந்து 'கிஸ்ஸா 47' என்ற பாடல் வெளியானது. அதில் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பாடல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் மீது திருப்பதி காவல் நிலையத்தில் ஜனசேனா கட்சியினர் புகார் செய்தனார். அதனை தொடர்ந்து, இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'கிஸ்ஸா 47' பாடலை நீக்கக் கோரியும், ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் சந்தானம், டிடி நெக்ஸ் லெவல் பட நிறுவனத்திற்கும் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பானுபிரகாஷ் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில் 'சீனிவாசா கோவிந்தா' என்று தொடங்கும் பாடலை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

1 More update

Next Story