

சென்னை,
'ஜோ' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த மாளவிகா மனோஜ் மற்றும் அப்படத்தின் இயக்குநருடன் நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் முதன்முறையாக கைகோர்த்துள்ளார். 'கருடன்' மற்றும் 'மகன்' ஆகிய வெற்றிப் படங்களைத் தயாரித்த முன்னணி தயாரிப்பு நிறுவனமான லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் பாரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை மிக பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றன.
'ஜோ' பட இயக்குநர் ஹரிஹரன் ராம் எஸ் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு, கதாநாயகனாக நடிக்கும் ஜி.வி. பிரகாஷ் குமாரே இசையமைப்பையும் மேற்கொள்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, கே.குமார் மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து தயாரிப்புப் பணிகளைக் கவனித்து வருகின்றனர்.
இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. படத்திற்கு ‘அன்புடன் மஹி’ என பெயரிடப்பட்டுள்ளது.