ரியா சிங்கா கதாநாயகியாக அறிமுகமாகும் படத்தின் டைட்டில் அறிவிப்பு

இந்தப் படத்தில் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா ரியா சிங்கா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
சென்னை,
''மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024'' பட்டம் வென்ற ரியா சிங்கா தற்போது தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.
"மாத்து வடலாரா" மற்றும் "மாத்து வடலாரா 2" படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குனர் ரித்தேஷ் ராணா , நடிகர் சத்யா மற்றும் கிளாப் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் மீண்டும் இணைந்துள்ளார். இந்தப் படத்தில் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா ரியா சிங்கா கதாநாயகியாக அறிமுகமாகிறார். சத்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
மது வடலாரா படங்களில் நடித்த வெண்ணிலா கிஷோர் மற்றும் அஜய் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கால பைரவா இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ஜெட்லி எனப்பெயரிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு விரைவில் ஐதராபாத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story






