சர்வானந்த்-மாளவிகா நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு


Title of Sharwanand-Malavika starrer film announced
x
தினத்தந்தி 20 Oct 2025 4:45 PM IST (Updated: 20 Oct 2025 4:46 PM IST)
t-max-icont-min-icon

சர்வானந்த் தற்போது தனது 36-வது படத்தில் நடித்து வருகிறார்.

சென்னை,

பிரபல நடிகர் சர்வானந்த். இவர் தமிழில் நாளை நமதே, எங்கேயும் எப்போதும், ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார்.

இவர் தற்போது தனது 36-வது படத்தில் நடித்து வருகிறார். வம்சி மற்றும் பிரமோத் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை அபிலாஷ் கங்காரா இயக்குகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

மாளவிகா நாயர் கதாநாயகியாக நடிக்க, பிரம்மாஜி மற்றும் அதுல் குல்கர்னி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த சூழலில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ’பைக்கர்’ என பெயரிடப்பட்டுள்ளது.

1 More update

Next Story