சிவகார்த்திகேயனின் 'எஸ்கே 23' படத்தின் டைட்டில் வெளியீடு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படத்திற்கு 'மதராஸி' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
Published on

சென்னை,

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து இன்று தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று சிவகார்த்திகேயன் தனது 40-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அதனை சிறப்பிக்கும் வகையில் 'எஸ்கே23' படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு தமிழில் 'மதராஸி' என்றும் இந்தியில் 'தில் மதராஸி' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com