நடிகர் பிரசாந்த் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியீடு

நடிகர் பிரசாந்த்தின் பிறந்தநாள் விழாவில் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் பிரசாந்த் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியீடு
Published on

சென்னை,

கோலிவுட்டில் டாப் நடிகர்களில் ஒருவராக இருந்தவர் பிரசாந்த். பின்னர் சில காரணங்களால் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். இவ்வாறு பல வருடமாக சினிமாவை விட்டு விலகி இருந்த நடிகர் பிரசாந்த் நடிப்பில்,, சமீபத்தில் 'அந்தகன்' என்ற படம் வெளியானது. அந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

அதனை தொடர்ந்து தற்போது நடிகர் பிரசாந்த் புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கிறார். அந்தகன் படத்தைத் தொடர்ந்து இந்த படத்தையும் பிரசாந்தின் அப்பா தியாகராஜன் தான் இயக்குகிறார். இந்த படத்தில் தேவயானி மகள் பிரியங்கா மற்றும் தயாரிப்பாளர் கதிரேசனின் மகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படம் தெலுங்கில் ரூ.5 கோடி தயாரிப்பில் வெளியாகி ரூ.60 கோடி வரை வசூல் செய்து வரவேற்பை பெற்ற கோர்ட் படத்தின் ரீமேக்காகும்.

இந்த நிலையில், நடிகர் பிரசாந்த் இன்று 53வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு விழாவாக மாற்றியுள்ளனர். இந்த விழாவில், வெற்றிமாறன், கலைப்புலி எஸ். தாணு, கே.எஸ். ரவிகுமார், தேவயானி உள்ளிட்ட பல பிரபலங்கள் கொண்டு புதிய படத்தின் டைட்டிலை வெளிட்டுள்ளனர். அதன்படி, இந்த படத்திற்கு 'ரஞ்சன்' The Advocate என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com