சந்தானம் நடிக்க உள்ள புதிய படத்தின் டைட்டில் வெளியீடு

இந்த படத்தை செல்வின் ராஜ் சேவியர் எழுதி இயக்க உள்ளார்.
சந்தானம் நடிக்க உள்ள புதிய படத்தின் டைட்டில் வெளியீடு
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக வெற்றிகரமாக பயணம் செய்து வருபவர் சந்தானம். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அவர், தொடர்ந்து ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ‘இங்க என்ன சொல்லுது’, ‘இனிமே இப்படித்தான்’, ‘சக்கப்போடு போடு ராஜா’, ‘தில்லுக்கு துட்டு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், சந்தானம் தற்போது செல்வின் ராஜ் சேவியர் எழுதி இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி இந்த படத்தை தயாரிக்கிறார்.

பேய் வீட்டு கதையை மையமாக கொண்டு திரில்லர் மற்றும் நகைச்சுவை கலந்த பாணியில் உருவாகும் இந்த படத்திற்கான டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, படத்திற்கு ‘லவ் பைட்’ என பெயரிடப்பட்டுள்ளது.

விரைவில் இப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதில் நடிக்கும் மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com