மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு..!

நடிகர் மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது.
மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு..!
Published on

சென்னை,

மகேந்திரன் இயக்கிய நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் அறிமுகமாகி 1980-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் மோகன். இவரது கிளிஞ்சல்கள் படம் 250 நாட்களுக்கு மேல் ஓடியது. பயணங்கள் முடிவதில்லை, உதய கீதம், விதி, இளமை காலங்கள், மவுனராகம், உயிரே உனக்காக, கோபுரங்கள் சாய்வதில்லை உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

2008-ல் சுட்டப்பழம் என்ற படத்தில் நடித்து விட்டு சினிமாவை விட்டு விலகினார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்க வந்துள்ளார். இந்த படத்திற்கு 'ஹரா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் விஜய் ஶ்ரீ இயக்குகிறார்.

இந்த படத்தில் மோகன் ஜோடியாக நடிகை குஷ்பு நடிக்கிறார். ஹரா படத்தை கோயம்புத்தூர் எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த நிலையில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com