பாரத்- சான்வி மேக்னா நடிக்கும் படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்குகிறார்.
 பாரத்- சான்வி மேக்னா நடிக்கும் படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு
Published on

சென்னை,

மாவீரன், 3பிஎச்கே, சியான் 63 போன்ற படங்களைத் தயாரித்த தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ், அதன் நான்காவது படத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தில் பிரபல யூடியூபர் பாரத் கதாநாயகனாக நடிக்கிறார், அவருடன் குடும்பஸ்தன் பட நடிகை சான்வே மேகனாவும் நடிக்கிறார். இந்த படத்தில் பாலா சரவணனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.

தமிழ் சினிமாவில் இந்த வருடம் எதிர்பார்ப்பு மிகுந்த புதிய திரைப்படங்களுள் ஒன்றாக, பாரத் சான்வி மேக்னா நடிக்கும் புதிய படம் தயாராகி வருகிறது. அறிமுக இயக்குனர் ஹரிஹரசுதன் அழகிரி இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரொமாண்டிக் காமெடி கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டுள்ளனர். அதன்படி, இந்த படத்திற்கு "காவியக் காதல்" என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com