நடிகையாக நீடிக்க அழகு முக்கியம் -நடிகை சமந்தா

சமீபத்தில் கணவர் நாகசைதன்யாவுடன் இணைந்து நடித்து திரைக்கு வந்துள்ள தெலுங்கு படம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார்.
நடிகையாக நீடிக்க அழகு முக்கியம் -நடிகை சமந்தா
Published on

திருமணத்துக்கு பிறகும் தமிழ், தெலுங்கில் அதிக படங்கள் கைவசம் வைத்து முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா சமீபத்தில் கணவர் நாகசைதன்யாவுடன் இணைந்து நடித்து திரைக்கு வந்துள்ள தெலுங்கு படம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

நான் முதல் படத்தில் இருந்ததை விட இப்போது இன்னும் அழகாக இருப்பதாக பலரும் பாராட்டுகிறார்கள். இதற்கு காரணம் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு. நடிகையாக நீடிக்க வேண்டும் என்றால் அழகாக இருந்தே ஆகவேண்டும். இதற்காக தினமும் உடற்பயிற்சி கூடத்துக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கண்டிப்பாக போய் தான் ஆகவேண்டும்.

சினிமா படப்பிடிப்பில் சோர்வடைந்து வீட்டுக்கு வரும்போது உடற்பயிற்சி கூடத்துக்கு செல்ல தயக்கம் ஏற்படும். ஆனால் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்துதான் ஆகவேண்டும். இல்லாவிட்டால் அழகு, ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். சினிமா துறையில் எவ்வளவு நாள் இருக்கிறோமோ அத்தனை நாளும் உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்வது அவசியம்.

நான் காலையில் புரதசத்து பானம், முட்டை சாப்பிடுகிறேன். மதிய உணவில் மீன், மாமிசம் இருக்க வேண்டும். இரவிலும் மதிய உணவுபோல் சாப்பிடுவேன். ரொட்டி, சாதம் சாப்பிட மாட்டேன். தானிய உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். உடற்பயிற்சி செய்யும்போது தண்ணீர் குடிப்பதை சிலர் மறந்து விடுகின்றனர். தண்ணீர் குடிக்காவிட்டால் சரும ஆரோக்கியத்தில் பாதிப்பு வரும். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். இவ்வாறு சமந்தா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com