“புதியவர்களிடம் வெட்கப்படாமல் பழகுவேன்” -ரகுல்பிரீத் சிங்

தமிழ், தெலுங்கு மொழியில் அதிக படங்களில் நடித்துள்ளார் ரகுல்பிரீத் சிங்.
“புதியவர்களிடம் வெட்கப்படாமல் பழகுவேன்” -ரகுல்பிரீத் சிங்
Published on

தற்போது இந்தியன்-2 மற்றும் சிவகார்த்திகேயன் படங்களில் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

ஒவ்வொரு நாளும் நமக்கானது என்ற உணர்வோடு வாழ வேண்டும். இன்றைய நாள் நமக்கு கிடைத்து இருக்கிறது. இன்று நாம் உயிரோடு இருக்கிறோம். இன்றைய நாளை நல்லபடியாக அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்படி வாழ்ந்தால் வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்காது.

நான் பஞ்சாபி பெண்ணாக இருந்தாலும் டெல்லியில் வளர்ந்தேன். தென்னிந்தியாவில்தான் எனது சினிமா வாழ்க்கை தொடங்கியது. ஆந்திராவில் இருக்கும்போது தெலுங்கு பெண்ணாகவும் சென்னைக்கு சென்றால் தமிழ் நாட்டு பெண்ணாகவும் மாறி விடுவேன். மும்பைக்கு சென்றால் அங்குள்ள பெண்ணாக தெரிவேன். பஞ்சாபி என்ற எண்ணமே எனக்கு வராது.

ராணுவ குடும்பத்து பெண்ணாக இருப்பதால் நாடெல்லாம் சுற்றி வந்தேன். சிறுவயதில் எனது குடும்பத்தினர் ஏதேனும் ஒரு ஊருக்கு போனால் அங்குள்ள சூழலுக்கு ஒன்றி போகமாட்டார்கள். நான் எளிதாக ஒன்றி போய் விடுவேன். எல்லோரிடமும் எளிதாக பழக்கம் பிடித்து நெருங்கி விடுவேன்.

எந்த மொழிக்கு போனாலும் புதிய மனிதர்களிடம் வெட்கப்படாமல் பழகி விடுவேன். பயந்தால் எதையும் செய்ய முடியாது. எந்த மொழியாக இருந்தாலும் நாம் இந்தியர் என்ற உணர்வுதான் எனக்கு இருக்கிறது. இவ்வாறு ரகுல்பிரீத் சிங் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com