கொரோனாவுக்கு நடிகை கவிதாவின் கணவர் பலி

தமிழ், தெலுங்கில் 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.
கொரோனாவுக்கு நடிகை கவிதாவின் கணவர் பலி
Published on

தமிழில் 1976-ல் மஞ்சு என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கவிதா. தொடர்ந்து ஆட்டுக்கார அலமேலு, காற்றினிலே வரும் கீதம், அந்தமான் காதலி, அல்லி தர்பார், நாடோடி தென்றல், வைதேகி கல்யாணம், செந்தமிழ் பாட்டு, அவள் வருவாளா, பாண்டவர் பூமி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். ஐதராபாத்தில் வசித்து வரும் கவிதாவின் கணவர் தசரதராஜ், மகன் சாய் ரூப் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி கவிதாவின் மகன் சாய் ரூப் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். கணவர் தசரதராஜுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவரும் தற்போது மரணம் அடைந்துள்ளார். கொரோனாவுக்கு மகன் இறந்த 15 நாளில் கணவரையும் பறிகொடுத்த கவிதாவுக்கு திரையுலகினர் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com