கொரோனாவுக்கு நடிகை பலி

இந்தி டி.வி. நடிகை திவ்யா பட்நாகர். இவர் யா ரிஷ்தா கியா கேக்லதா ஹய் தொடரில் நடித்து பிரபலமானார்.
கொரோனாவுக்கு நடிகை பலி
Published on

தேரா யார் ஹூன் மெயின் என்ற நகைச்சுவை தொடரும் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது. திவ்யா பட்நாகருக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றினர். செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. திவ்யா பட்நாகரின் தாய் கூறும்போது, 6 நாட்களாக திவ்யாவுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்தது. அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானதும் ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். ஆனாலும் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றார்.

இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி திவ்யா பட்நாகர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 34. இது டி.வி. நடிகர், நடிகைகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திவ்யா மறைவுக்கு அவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com