

சென்னை,
பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளரும், பாலிவுட் நடிகையுமான பிரீத்தி ஜிந்தா, பெண்கள் குறித்த தனது ஆழமான கருத்தைப் பகிர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் போட்டிகளின் போது மைதானத்திற்கு நேரில் வந்து உற்சாகப்படுத்தும் பிரீத்தி ஜிந்தா இணையத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகை ஒருவர், "பஞ்சாப் கிங்ஸ் அணியின் உண்மையான கோப்பையே (Trophy) நீங்கள்தான்" என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார்.
ரசிகையின் அந்தப் பாராட்டுக்கு நன்றி தெரிவித்த பிரீத்தி ஜிந்தா, அதே சமயம் பெண்கள் குறித்த தனது வலுவான நிலைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார். அதில்,
"உண்மை என்னவென்றால், எந்தப் பெண்ணும் ஒரு 'கோப்பையாக' (Trophy) இருக்க விரும்புவது இல்லை. கோப்பைகள் என்பவை ஒருவருக்குச் சொந்தமானவை, ஆனால் பெண்கள் யாருக்கும் அடிமையானவர்கள் அல்ல. கோப்பைகள் என்பவை கண்ணாடி அலமாரிகளில் பூட்டி வைக்கப்படுபவை. ஆனால் ஒரு பெண்ணுக்கான இடம் உங்கள் வாழ்விலும் உங்கள் இதயத்திலும் இருக்க வேண்டும்," எனத் தெரிவித்துள்ளார்.
பெண்களை ஒரு பொருளாகவோ அல்லது காட்சிப் பொருளாகவோ பார்க்காமல், அவர்களுக்கு உரிய மதிப்பையும் இடத்தையும் வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டிருப்பது பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.