இன்று ஓடிடியில் வெளியான திரைப்படங்கள்


இன்று ஓடிடியில் வெளியான திரைப்படங்கள்
x
தினத்தந்தி 21 Jun 2024 10:04 AM GMT (Updated: 21 Jun 2024 10:04 AM GMT)

அரண்மனை 4 திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது.

சென்னை,

ஹிப் ஹாப் ஆதி நடித்த பி.டி சார் திரைப்படம் கடந்த மாதம் 24-ம் தேதி திரையரங்குகளில் வௌியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. இப்படத்தை கார்த்திக் வேனுகோபாலன் இயக்க, பாக்யராஜ், பிரபு, பாண்டியராஜ் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். தற்போது, பி.டி.சார் படம் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாகவும் தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாகவும் நடித்து கடந்த மாதம் 10-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படம் ரசவாதி. இப்படத்தை, கடமவுனகுரு, மகாமுனி உள்ளிட்ட படங்களை இயக்கிய சாந்தகுமார் இயக்க, ரம்யா சுப்ரமணியன், ஜி.எம்.சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், ரிஷிகாந்த் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். தற்போது, இப்படம் அமேசான் பிரைம் வீடியோ மற்றும் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த மாதம் 3 -ந்தேதி வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் அரண்மனை 4. இதில், தமன்னா, ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்தார். தற்போது இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது.


Next Story