பாலிவுட்டின் மோசமான முகத்தை வெளிப்படுத்திய நடிகை சமீரா ரெட்டி

பாலிவுட்டின் மற்றொரு மோசமான முகத்தை நடிகை சமீரா ரெட்டி வெளிப்படுத்தியிருக்கிறார்.
பாலிவுட்டின் மோசமான முகத்தை வெளிப்படுத்திய நடிகை சமீரா ரெட்டி
Published on

மும்பை

சினிமா நடிகையின் வாழ்க்கை அவ்வளவு சுலபமல்ல. சினிமா துறையில் நிலைநிற்க வேண்டுமானால் எந்த எல்லைக்கும் செல்ல வேண்டும். சமீபத்தில் பல நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை மீடூ மூலம் வெளிப்படுத்தினர்.இந்த நிலையில் பாலிவுட்டின் மற்றொரு மோசமான முகத்தை நடிகை சமீரா ரெட்டி வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பிறந்த சமீரா ரெட்டி 2002ல் பங்கஜ் உதஸின் இசை ஆல்பத்தில் நடித்த்தார். இதை தொடர்ந்து சமீரரெட்டி பாலிவுட்டில் அறிமுகமானார். பின்னர் 'மைனே தில் துஸ்கோ தியா' என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். வாரணம் ஆயிரம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதில் சிறந்த நடிகைக்கான விருதும் பெற்றார். மலையாளத்தில் ஒருநாள் வரும் என்ற படத்தில் மோகன்லாலின் கதாநாயகியாக அறிமுகமானார்.

மூக்கு, உதடு போன்ற பாகங்களை அழகுபடுத்துவதற்காக நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்வது இயற்கையான ஒரு சம்பவம். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அந்த நேரத்தில்தான் நடிகை சமீராவும் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தார்.

சமீரா ரெட்டி டைரகடர் ஒருவர் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டார் என்ற விஷயத்தை பகிர்ந்துள்ளார். பாலிவுட் நட்சத்திரங்கள் இந்த விஷங்களில் சிலவற்றைத் தாங்க வேண்டியிருந்தது என்றும் சமீரா குறிப்பிட்டுள்ளார்.

ஒரு படத்தின் ஆடிஷனில் கலந்து கொண்டபோது, பாலிவுட் டைரக்டர் ஒருவர் சமீராவிடம் மார்பகங்களை அழகாகவும், பெரிதாகவும் மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொள்ளவேண்டும் என கூறி உள்ளார்.ஆனால் அதற்கு சமீரா மறுப்பு தெரிவித்தார்.

மார்பகத்தை பெரிதாக்க சமீரா அறுவை சிகிச்சை செய்ய மறுத்தாலும், அதை பெரிதாக்க சில முயற்சிகளை மேற்கொண்டதாக நடிகர் சமீரா கூறுகிறார்.

சமீரா நடிகர் அக்ஷய் வர்தாவை 2014 இல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com