திரை உலகை கண்டித்து நடிகை திடீர் அரை நிர்வாண போராட்டம்

தெலுங்கு நடிகைகளுக்கு எதிராக தெலுங்கு திரையுலகில் நடைப்பெற்று வரும் துஷ்பிரயோகங்களை குறித்து அப்படமாக வெளிக்கொண்டு வந்த ஸ்ரீ ரெட்டி இன்று அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்!
திரை உலகை கண்டித்து நடிகை திடீர் அரை நிர்வாண போராட்டம்
Published on

ஐதராபாத்

நடிகர்-நடிகைகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களால் கடந்த வருடம் தமிழ் பட உலகை உலுக்கிய சுசிலீக்ஸ் போன்று தெலுங்கு பட உலகை புதிதாக கிளம்பி உள்ள ஸ்ரீலீக்ஸ் ஆட்டிப்படைக்கிறது. தெலுங்கில் பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுக்கும் பிரபலங்களின் பெயர்களை ஸ்ரீ லீக்ஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில் வெளியிடுவேன் என்று தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி மிரட்டி உள்ளார்.

முதன்முதலாக அரைகுறையாக ஒருவரது முகம் ஸ்ரீலீக்ஸில் வெளியானது. இது தொடர்ந்து பிரபல தெலுங்கு டைரக்டர் சேகர் கம்முலுவும் ஸ்ரீலீக்சில் சிக்கி உள்ளார். இவர் நயன்தாரா நடித்து தமிழில் வெளியான நீ எங்கே என் அன்பே என்ற பெயரிலும், தெலுங்கில் அனாமிகா என்ற பெயரிலும் வெளியான படத்தை டைரக்டு செய்தவர். சாய்பல்லவி நடித்த பிடா என்ற தெலுங்கு படத்தையும் இயக்கி உள்ளார். இந்த குற்றச்சாட்டை டைரக்டர் சேகர் கம்முலு மறுத்து இருந்தார்.

ஆனால் தொடர்ந்து ஸ்ரீரெட்டி பாலியல் குற்றம்சாட்டினார் இந்த குற்றச்சாட்டிற்கு தெலுங்கு திரையுலகினர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் பெண் நடிகைகளும் இவரது குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து வந்தனர். இதனையடுத்து தெலுங்கு திரையுலகில் இவர் நடிப்பதற்கான உரிமத்தினை தெலுங்கு திரையுலகம் ரத்து செய்தது.

இந்நிலையில் தெலுங்கு திரைப்பட துறையின் இந்த முடிவினை எதிர்த்தும், தனக்கு நியாயம் வேண்டும் என கோரியும் இவர் இன்று அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்!

முன்னதாக தெலுங்கு திரையுலகில் வாய்ப்பு கிடைக்க வேண்டுமெனில், நடிகைகள் தங்கள் கற்பினை விலையாக கொடுக்க வேண்டியுள்ளது. தெலுங்கு திரையுலகில் திறமையான நடிகைகள் இருந்த போதிலும், மும்பையில் இருந்து நடிகைகள் கொண்டுவரப் படுவது என பல முறைகேடுகள் நடைப்பெற்று வருகிறது.

ஒருவேலை வாய்ப்பு கிடைத்தாலும், அவர்களுக்கு கிடைக்கும் சம்பளம் மிகவும குறைவுதான் எனவும் குற்றம் சாட்டினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com