பிக் பாஸ் பிரபலத்திற்கு அடித்த ஜாக்பாட்... ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கும் தனுஜா

நடிகர் கிரண் அப்பாவரம் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
தனுஜா புட்டசாமி
Published on

ஐதராபாத்,

பிக்பாஸ் மூலம் பிரபலமான தனுஜா புட்டசாமி, தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.

பிக் பாஸ்

கன்னட சின்னத்திரையில் நடிகையாக நல்ல வரவேற்பை பெற்ற தனுஜா புட்டசாமி, பின்னர் ‘பிக் பாஸ் தெலுங்கு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். சீரியல்கள் மட்டுமின்றி ஓடிடி தொடர்களிலும் இவர் நடித்துள்ளார்.

முதல் பட வாய்ப்பு

இந்நிலையில், தனுஜாவுக்கு வெள்ளித்திரையில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நடிகர் கிரண் அப்பாவரம் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

கிரண் அப்பவரம் தனது ‘கே.ஏ புரொடக்சன்ஸ்’ பேனரில் தொடர்ந்து படங்களைத் தயாரித்து வரும் நிலையில், தற்போது இந்த புதிய திரைப்படத்தை அறிவித்துள்ளார்.

அனுஷ் கோரக் இயக்குநராக அறிமுகம்

சிவசங்கர் நாயுடு தயாரிக்கும் இப்படத்தின் மூலம் அனுஷ் கோரக் இயக்குநராக அறிமுகமாகிறார். தனுஜா புட்டசாமியுடன் குஷ்லு, நம்ரிதா எம்.வி, ரஹ்மான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஹாரர் திரில்லரா?

படத்தின் அறிவிப்பு போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒரு பறவையின் கால்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளதுடன், “இப்படிப்பட்ட ஒரு கதையை இதுவரை நீங்கள் திரையில் பார்த்திருக்க முடியாது... இப்படிப்பட்ட ஒரு ஜானரை நீங்கள் ஊகித்திருக்க முடியாது” என்ற சுவாரசியமான வாசகமும் இடம்பெற்றுள்ளது.

இதனால், இப்படம் முற்றிலும் புதிய கதைக்களத்துடன் கூடிய ஹாரர் திரில்லர் திரைப்படமாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com