"நடிப்பிலிருந்து ஓய்வு "... ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நடிகை - உருக்கமான பதிவு

திரைப்படங்களிலிருந்து தற்காலிகமாக ஓய்வு எடுப்பதாக அறிவித்துள்ளது வைரலாகி வருகிறது.
"நடிப்பிலிருந்து ஓய்வு "... ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நடிகை -  உருக்கமான பதிவு
Published on

ஐதராபாத்,

தெலுங்குத் திரையுலகில் 'மா ஊரி பொலிமேரா' (Maa Oori Polimera) படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை காமாக்சி பாஸ்கர்லா. அந்தப் படத்தில் அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

அதன்பின் நாயகியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் பல படங்களில் நடித்துத் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். 'இட்லு மாரேடுமில்லி ப்ரஜானீகம்', 'ரவுடி பாய்ஸ்', 'விருபாக்சா', 'மிக்ஸ் அப்', 'ஓம் பீம் புஷ்' போன்ற படங்களில் இவரது நடிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் அதிவி சேஷ் நடிப்பில் உருவான 'டகோயிட்' படத்தில் நடித்திருந்தார்.

தற்போது 'அகதா' மற்றும் 'மா ஊரி பொலிமேரா 3' போன்ற பெரிய படங்கள் கைவசம் உள்ள நிலையில், காமாக்சி ஒரு அதிர்ச்சியான முடிவை அறிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் திரைப்படங்களிலிருந்து தற்காலிகமாக ஓய்வு (Break) எடுப்பதாக அறிவித்துள்ளது வைரலாகி வருகிறது.

இதுகுறித்து காமாக்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எனக்கு சினிமா மீதோ அல்லது நடிப்பின் மீதோ சலிப்பு ஏற்பட்டு இந்த முடிவை எடுக்கவில்லை. சுய பராமரிப்புக்கும், மனநலத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த கடினமான முடிவை எடுத்துள்ளேன். சில நேரங்களில், நமது இலக்குகளை சென்றடைய, ஒரு படி பின்வாங்குவது அவசியம். நான் எங்கும் போய்விடவில்லை, விரைவில் உங்களிடம் திரும்பி வருவேன்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com