’வெண்ணங்கொடி முனியப்பன்’ கோவிலில் சாமி தரிசனம் செய்த ’ரெட்ட தல’ படக்குழு

அருண் விஜய்யின் ‘ரெட்ட தல’ படம் வரும் 25ம் தேதி வெளியாக உள்ளது.
சென்னை,
ரெட்ட தல படத்தின் குழுவினர் ’வெண்ணங்கொடி முனியப்பன்’ கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். இப்படம் வெளியாக இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளநிலையில், கதாநாயகன் அருண் விஜய், கதாநாயகி சித்தி இத்னானி உள்ளிட்டோர் சேலத்தில் உள்ள ’வெண்ணங்கொடி முனியப்பன்’-ஐ தரிசனம் செய்துள்ளனர்.
அருண் விஜய் தற்போது கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் ‘ரெட்ட தல’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்க சாம்.சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 25 ந் தேதி வெளியாக உள்ளது.
Related Tags :
Next Story






