2026-ம் ஆண்டின் தென்னிந்திய பணக்கார நடிகைகளின் டாப் 10 பட்டியல்

டாப் 10 பட்டியலில் நயன்தாராவின் சொத்து மதிப்பு ரூ.200 கோடி என தகவல் வெளியாகி இருக்கிறது.
2026-ம் ஆண்டின் தென்னிந்திய பணக்கார நடிகைகளின் டாப் 10 பட்டியல்
Published on

திரை உலகில் ஹீரோக்கள் மட்டுமே அதிக சம்பளம் வாங்கி வந்தனர். சமீபகாலமாக ஹீரோயின்களின் சம்பளமும் அதிகரிக்க தொடங்கி வருகிறது. கதாநாயகர்களை போல கதாநாயகிகளின் சம்பளமும் கோடிகளை தாண்டி உள்ளது. சினிமா மட்டுமின்றி விளம்பரங்கள் மற்றும் சொந்தமான தொழிலில் ஈடுபடுவது மூலம் கதாநாயகிகளின் வருமானம் உச்சத்தை அடைந்து வருகிறது.

இந்நிலையில் 2026-ம் ஆண்டு தென்னிந்திய திரை உலகில் டாப் 10 கதாநாயகிகளின் பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா: தென்னிந்திய திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வரும் நயன்தாரா சினிமா நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பு, விளம்பர படங்கள், சொந்தமாக அழகு சாதன பொருட்கள் விற்பனை போன்றவை செய்து வருகிறார். தற்போது யாஷ் நடிப்பில் உருவாகி வரும் டாக்ஸிக் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது சொத்து மதிப்பு ரூ.200 கோடி என தகவல் வெளியாகி இருக்கிறது.

அனுஷ்கா: பாகுபலி, அருந்ததி போன்ற படங்கள் மூலம் இந்திய அளவில் பிரபலமான அனுஷ்கா சொத்து மதிப்பு ரூ.135 கோடியை தாண்டியுள்ளது.

தமன்னா: தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடிப்பது, தனி பாடலுக்கு நடனம் ஆடுவது என திரை உலக ரசிகர்களை கவர்ந்து வரும் தமன்னா சொத்து மதிப்பு ரூ.110 முதல் ரூ.120 கோடி என கூறப்பட்டுள்ளது.

சமந்தா: ரூ.110 முதல் ரூ.120 கோடி, திரிஷா-ரூ.85முதல் ரூ.100 கோடி, காஜல் அகர்வால்-சுமார் ரூ.85கோடி, ராஷ்மிகா மந்தனா-ரூ.66 கோடி, பூஜா ஹெக்டே-ரூ.50 கோடி, சாய்பல்லவி-ரூ.47 கோடி,சுருதிஹாசன்-ரூ.45 கோடி என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com