டொரண்டோ தமிழ் இருக்கைக்கு டி.இமான் பாடல்

லண்டன் உள்பட மேலும் சில வெளிநாடுகளிலும் தமிழ் இருக்கை அமைக்க அங்குள்ள தமிழ் அமைப்புகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
டொரண்டோ தமிழ் இருக்கைக்கு டி.இமான் பாடல்
Published on

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு ரூ.39 கோடிக்கு மேல் செலவாகும் என்று மதிப்பிட்டு அதற்கான நிதி திரட்டும் பணிகளும் நடந்தன. இந்த நிலையில் லண்டன் உள்பட மேலும் சில வெளிநாடுகளிலும் தமிழ் இருக்கை அமைக்க அங்குள்ள தமிழ் அமைப்புகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

கனடாவில் உள்ள டொரண்டோ பல்கலைக்கழகத்திலும் ஆராய்ச்சி மாணவர்களுக்காக தமிழ் இருக்கை அமைக்கப்படும் என்று அங்குள்ள தமிழ் அமைப்பினர் அறிவித்து இருந்தனர். அதற்கான ஏற்பாடுகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. அங்கு அமைய உள்ள தமிழ் இருக்கைக்கான தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை உருவாக்கும் பணி இசையமைப்பாளர் டி.இமானிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

மாற்றத்துக்கான தலைவர்கள் என்ற விருதை பெறுவதற்காக கனடா சென்றுள்ள டி.இமான் இந்த தகவலை டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

டொரண்டோ தமிழ் இருக்கைக்கான தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை உருவாக்கும் பொறுப்பை எனக்கு வழங்கிய கனட தமிழ் அமைப்பினருக்கு நன்றி. இந்த பணியை நான் பெருமையாக கருதுகிறேன். உலகம் முழுவதும் உள்ள திறமையான தமிழ் கலைஞர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிப்பேன்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com