1,200 சதவீதம் லாபம்...இந்திய சினிமாவில் அதிக லாபம் ஈட்டிய படம் எது தெரியுமா?

2025-ம் ஆண்டில் இதுவரை இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்த படம் விக்கி கவுஷல் நடித்த சாவா ஆகும்.
சென்னை,
ரூ.7 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட ''டூரிஸ்ட் பேமிலி'' படம் சுமார் 1,200 சதவீதம் லாபம் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குனர் அபிசன் ஜீவிந்தின் ''டூரிஸ்ட் பேமிலி'' படம், 2025-ம் ஆண்டில் இந்தியாவின் அதிக லாபம் ஈட்டிய படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி சுமார் ரூ. 90 கோடி வசூலித்தது.
விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட இந்த படத்தில் சசிகுமார், சிம்ரன் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
மேலும், கமலேஷ் ஜெகன், மிதுன் ஜெய் சங்கர், ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி மற்றும் பகவதி பெருமாள் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
2025-ம் ஆண்டில் இதுவரை இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்த படம் விக்கி கவுஷல் நடித்த சாவா ஆகும். இது உலகளவில் ரூ. 800 கோடிக்கு மேல் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.






